Thursday, 4 February 2016

அரியலூரை ஆண்ட மழவராயர் வம்ச வரலாறு

மழவராயர் வம்சம்

சோழனும் வீழ்ந்தான் , சேரனும் வீழ்ந்தான், பாண்டியனும் வீழ்ந்தான். ஆனால்  எந்த சலனமும் இல்லாமல் 1000 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் நிலைத்து நின்று தமிழகத்திலும் ஈழத்திலும் ஆண்டு  வந்த ஒரே வம்சம். வன்னியர் குல க்ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த மழவராய வம்சம் தான் 


மழவராய வம்ச வரலாறு 

மழவர் என்றால் இளமையான நிலா பகுதியில் இருந்து வந்தவர் என்று அர்த்தம் . மழவர் குடிமக்கள் தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை, திருச்சியில் உள்ள திருப்பாச்சில் போன்ற தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் வாழ்ந்துவந்த சங்ககால மக்கள்.

இவர்கள் சேர வழி வந்தவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. சோழ குல பெண்களில் மிக உயர்ந்தவராக கருத படும் செம்பியன் மாதேவி மழவர் வழி வந்தவர்

இத்தகைய மழவர்களை ஆட்சி செய்த மன்னர் மழவராயர் என பட்டனர். இம்மழவ்ராயர்கள் அரியலூரை தலைநகராக கொண்டு 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வந்துள்ளனர் . அவர்கள் ஆண்ட பகுதி இவர்களுடைய பெயராலேயே திருமழபாடி என்று அழைக்கபடுகிரது,

அரியலூர் மழவராயர் பற்றி சோழர் காலத்தில் கண்டெடுக்க பட்ட கல்வெட்டு 

அரியலூர் மழவராயர்கள், சோழ மன்னன் வீர ராஜேந்திர சோழனின் (கி.பி. 1070) நன்னிலம் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகிறார்கள்

தடூரில் மழவர்கள் 

தகடூர் நாட்டை(தருமபுரி ) ஆண்ட மன்னன் அதியமான் தமிழரில் வீரஞ்செறிந்த குடியினரான மழவர்கள் இனத்தை சேர்ந்தவன், எனவே அவனை புலவர் அவ்வையார் அதியமானை மழவர் பெருமகன் என்று மிக அழகாக பெருமிதமாக குறிப்பிடுகின்றார். தகடூர் நாட்டில் இவர்கள் பெருந்தக்குடியினர், ஆளும்வர்க்கதினர், நாடாண்டமரபினர் இவர்களே பின்னர் மழவராயர் என்று அழைக்கபடுகின்றனர். இந்த மழவர்களே தகடூர் நாட்டில் வழி வழியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மழவர் பெருமகனான அதியமானின் மரபுவழி மக்களாவர். இவர்கள் தகடூர் நாட்டில் தனித் தமிழ் இனமாகும். இவர்களுக்கென்று தனிநாடு தகடூர் நாடு, இவர்களின் தலைநகரம் தகடூராகும். இவர்களின் குடியில் மாபெரும் வீரனும் மன்னனுமான அதியமான் நெடுமானஞ்சி புகழ் அரசனாவான். 

தகடூர் நாட்டில் வில்லின் நானேற்றி அம்பு தொடுத்து போரிடும் மழவர்களை மறவர்களை கொண்டிருந்தது என்று பதிற்றுப்பத்தில் அர்சில்கிழார் கூறுகின்றார். அகநானூற்றில் 187 ம் பாடலில் மாமூலனார் மழவர்களின் போர்த்திறனையும் அவர்களது குதிரையின் சிறப்பையும் அவர்களது கால்களில் வீரக்கழல்கள் போலிந்ததையும் கறுத்தோரை பகைவரை பிறழ்ந்து நோக்கி வீரத்தோடு போரிட்டு அழிக்கும் ஆற்றலையும் வன்கண் மழவர் என்றும் தறுகண்மையையுடையவர் என்றும் குறிப்பிட்டு தகடூர் நாட்டில் மழவர் முதன் முதலாக அம்புவிடும் நாள் விழா தொடை விழா என்று கொண்டாடுவார்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். 

தகடூர் நாடு மழவர் நாடு:-


“கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே – முனாஅது
முழவுறழ் திணிதோள் நெடுவேல் ஆவி”
-            -அகம்: 61 (மாமூலனார்)

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து 

டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள்

 பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் அரியலூர் மழவராயர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் சங்ககால மழவர்களின் மரபினர்கள் என்றும் அவர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்கள் என்றும் ஒப்பிலா அம்மனை வழிப்படுபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அரியலூர் மழவராயர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க காலம் முதற்கொண்டு கி.பி. 20 ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவதாகவும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்டு பற்பல சான்றுகளையும் கொடுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று :-
"இரண்டாம் மாற வர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1239 - 1251) தனது பத்தாம் ஆட்சியாண்டில், ஐயன் மழவராயன் விருப்பப்படி, திருமாலுகந்தான் கோவில் என்னும் ஊரிலுள்ள ஒப்பிலா முலையார் என்ற அம்மன் கோவிலுக்கு வரியிலியாக நிலங்களை விட்டான் என்று குறிப்பிடுகிறார்"

டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்ட "ஐயன் மழவராயன்" அவர்கள் இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1239 - 1251) ஆட்சி காலத்தில் மதுரை அழகர் கோயிலுக்கும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் கொடைகள் வழங்கியுள்ளதை கல்வெட்டு சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.


தமிழ் தாத்தா உ .வே .சாமிநாத ஐயர் 

மழவராயர் பற்றி  அவர்கள் கூறுவது 



(ஆதாரம் நல்லூர் கோவை . உ.வே சா )


தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா 

அவர்கள், அரியலூர் மழவராயர்களைப் பற்றி "வன்னியர்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். கர்னல் மெக்கென்சி சேகரித்த குறிப்புக்களில் "அரியலூர் பாளையக்காரர் கைபீது (கி.பி. 1805)" என்ற கைபீதும் ஒன்றாகும். இக் கைபீது "மாளவராயர் அரியலூர் பாளையக்காரர் ஸம்ஸ்தானம் மதுரை, திருச்சிராப்பள்ளி வகையறா" என்று தொடங்கப்பெற்றிருக்கிறது. ஜாதியில் வன்னிய குலத்தவர்களுடைய வமிசாவளி என்று குறிப்பிடுவதாக தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அரியலூர் பாளையக்காரர்களின் சமஸ்தானம் "மதுரை திருச்சிராப்பள்ளி வகையறா" என்று கைபீது தெளிவாக குறிப்பிடுவதால், வன்னிய குல க்ஷத்ரியர்களான மழவராயர்கள் சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் மதுரையை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. மேலும் கைபீது "பள்ளிக் கொண்ட ஒப்பிலா மழவராயர்" என்ற அரியலூர் அரசரை குறிப்பிட்டு அவருடைய ஆட்சியாண்டையும் (கி.பி. 1422 - 1457) குறிப்பிடுகிறது.

பாண்டியர்களுடைய பல கல்வெட்டுகளில் "பள்ளிப் பீட மழவராயன்" என்றும் "பள்ளிக் கட்டில் மழவராயன்" என்றும் குறிப்பிடப்படுகிறது. இப் பெயர்கள் என்பது பாண்டிய அரசர்கள் தாங்கள் பயன்படுத்திய "பள்ளிக் கட்டிலாகும்". அதாவது "பாண்டிய அரசர்களது சிம்மாசனமாகும்". அத்தகைய பெருமைமிகு சிம்மாசனத்திற்கு வன்னியர்களான மழவராயர்களது பெயரினை பாண்டியர்கள் வைத்திருக்கிறார்கள் என்பது வன்னியர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகும். இதன் மூலம் "பள்ளி" என்னும் சொல் "வேந்தனை" குறிப்பிடும் சொல்லாக அறியமுடிகிறது.

கல்வெட்டுகள்  :-



அரியலூர் மழவராயர்களைப் பற்றி பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காணக்கிடைகின்றன. அவர்கள் பல கோயில்களை எழுப்பியும் கொடைகளை வழங்கியும் வரலாற்றில் புகழ் பெற்றிருக்கிறார்கள். அரியலூரில் கோதண்டராமஸ்வாமி கோயிலில் மழவராயர்கள் கட்டிய "தசவதார மண்டபம்" என்பது தமிழகத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காததாகும்.

"விளை நிலத்துக்கு கிழ்பாற் கெல்லை கன்னரதேவன் மருதமாணிக்க தேவன் நிலத்துக்கு மேற்கும் தென்பாற் கெல்லை அரியலூருடையான் மழவதரையன் நில......."

அறியலுரடையான் மழவதரையன் என்பதன் மூலம் கிபி 1070 கலிலியே  மழவராயர்கள் அரியலூரை ஆண்டுவருவது புலப்படும் 

மேலும் ஒரு நன்னிலம் கல்வெட்டு "பரமேச்சுவர மங்கலத்து அரியலூருடையான்" என்று குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீ வல்லபப் பண்டியனுடையதாகும்.

அடுத்த தாக 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் மழவராயர் பற்றிய கல்வெட்டு கிடைக்க பெற்றுள்ளது 

கல்வெட்டின் தொடர்ச்சி 

இதன் மூலம் சோழர்  பாண்டியர் காலம் முதலே மழவரயார்கள் ஆண்டு வந்தது உறுதிசெய்ய படும் . மேலும் இம்மனர்கள் வம்சத்தை பட்டியலிட்டு முறையாக வெளியிடப்பட்டுள்ளது 




இதன் மூலம்  1808 ஆண்டு வரை சுமார் 497 ஆண்டுகள் அதாவது கிபி 1308 முதல் ஆண்டு வந்த மழவராய மன்னர்களை பெயர்களை அறிய முடிகிறது 


செப்பேடுகள் 

புதுகோட்டை செப்பேடு 


கி.பி. 1450 ஆம் ஆண்டில் "பள்ளி கொண்ட பெருமாள் மழவராயர்" என்ற அரசர் பட்டுக்கோட்டைப் பகுதிக்குத் தலைவனாயிருந்தான் என்று திருச்சிற்றேமம் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. கி.பி. 1582 ஆம் ஆண்டின் புதுக்கோட்டை செப்பேட்டில் வன்னியர்களான அரியலூர் மழவராயர், பருவூர் கச்சியராயர், பிச்சாவரம் சோழகனார் மற்றும் உடையார்பாளையம் காலாட்கள் தோழ உடையார் குறிப்பிடப்படுகிறார்கள்


    எனவே வன்னிய அரசர்கள் புதுக்கோட்டை பகுதியை கி.பி. 16 ஆம் நூற்றாண்டிலும் அரசாட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. கள்ளர் குல தொண்டைமான்கள் கி.பி. 1686 ஆம் ஆண்டு முதலே (கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம்) புதுக்கோட்டைப் பகுதியை அரசாட்சி செலுத்த தொடங்கினார்கள் என்பது வரலாறாகும்.


அரியலூர் செப்பேடு 



கிபி 1703ம் ஆண்டு எழுதப்பட்ட செப்பேடு சிதம்பரத்தில் வீரமாயேசுர சமைய (வீரசைவர் )  மடம் அமைத்துள்ள பாதபூசை அம்பலத்தடிகளுக்கு ஒப்பிலா மழவராயர் பராபரை நன்மைக்காக கொடுத்த தர்ம சாதன பட்டயம் 






 திருமானூர் செப்பேடு 


கிபி 1790ம் ஆண்டு எழுதப்பட்ட இச்செப்பேடு,  திருமானூரில் உள்ள ஸ்ரீகயிலாசநாதர் கோவிலுக்கு ஸ்ரீ விசைய ஒப்பில்லாத மழவராயர் குமாரர் ஸ்ரீ குமர ஒப்பில்லா மழவராயர் பிராமணருக்கு அழித்துள்ள நில கோடையை குறிப்பிட்டுள்ளது 



வன்னிய குலத்தவரான மழவராயர்கள் 

மழவராயர்கள் வன்னிய குலத்தவர் என்பதை கீழ் காணும் ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது 

 


"ராச ராச வள நாட்டு ராசெந்திர சொழ வளநாட்டுள் மிழலை 

நாட்டுள்ச் செர்ந்த சொழவளமாகிய தலத்துள் வன்னியர் குல

கிரில தரில நாட்டுக் அதிபதியராகிய குண்ணத்தூர்க் கட்டியப்ப

நாயினார் குமாரர் நாகய மளவாரய நயினாரவர்களும் 

பென்னாடகம் பிரளையங்காத்த கடந்தையார் கொத்திரத்தில்

பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியனாயக்க நயினாரவர்களும்

நம்முட குண்ணத்தூர் காணிக்கும் பென்னாடக காணிக்கும்"


(South Indian Temple Inscriptions, Vol-III (Part-1), 1511 A.D.)

மேலே குறிப்பிடும் கல்வட்டு அரியலூர் மழவராயர்களை வன்னிய குலத்தவர் என்று குறிப்பிடுகிறது, மேலும் பென்னாடத்தை ஆண்ட கடந்தையார்களையும்  வன்னிய குலம் என்றும் இருவரும் உறவினர் என்றும் அறிய முடிகிறது 

கோதண்டராமசுவாமி சதகம்

இராமதாச பரம பாகவதர் எழுதிய   கோதண்டராமசுவாமி சதகம், மழவராயரை வன்னிய குல சந்திரன் என்று குறிபிடுகிறது  


"மகா ராஜ ராஜ ஸ்ரீ வன்னிய குல சந்திரன் மகிதலத்தினில் 

இந்திரன்"  (அரியலூர் அரசர் விஜய ஒப்பிலாத மழவராயர்) 


(பாடல்-101)

இராமச்சந்திர கவிராயரின் பாடல்


கள்ளிக்கேன் முள்வேலி கழுதைக்கேன் 

           கடிவாளம் கறுப்பில் லாத
உள்ளிக்கேன் பரிமளங்கள் உவர்நிலத்துக் கேன்
            விதைகள் ஒடிந்து போகும்
சுள்ளிக்கேன் கோடாலி துடைப்பத்திற் கேன்
            கவசம் சும்மா போகும்
பள்ளிக்கேன் அதிவீர மழவரங்க 
            பூபனெனும் பட்டந் தானே

(ஆதாரம்: இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல்கள் ( 21) https://ta.wikisource.org/s/3ob)
வெள்ளாலரான இராமச்சந்திர கவிராயர் மழவராயரை "பள்ளி" என்று கூறும் பாடல். 
இதில் கவிஞர் மழவராயரை வசை பாடியுள்ளார் . காரணம் அவர் பாடிய பாட்டுக்கு பரிசு தராத கோவம் . அனால் மழவராயர்கள்  எப்படி பட்ட கொடையாளர்கள்  என்பதற்கு அவர்கள்  பற்றி மேலே கூறியுள்ள செப்பேடுகள் தான் சாட்சி. 

நல்லூர் கோவை . 

நல்லூர் கோவை எனும் நூலில்  உ.வே சா அவர்கள் மழவராயர்கள் வன்னிய மரபினர் என்று குறிபிடுகிறார் 



(ஆதாரம் நல்லூர் கோவை . உ.வே சா ) 
(http://www.tamilnavarasam.com/Ilakkiyam/U.Ve_Sa/Nalluru_kovai.pdf)

Trichinopoly District Gazetteer 

ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட திருச்சிராப்பள்ளி கசட்டர் மழவராயர்களை வன்னியர் பிரிவான படையாட்சி என்கிறது 



படியளந்த ஜமீன்தார்

தேவாலயத்துக்கு நிலம் வழங்கியவர் 

1736ம் ஆண்டு மழவரயார் ஜமிந்தாரான ரங்கப்ப மழவராயர் கிறிஸ்துவ தேவாலயம் கட்டுவதற்காக 175 ஏக்கர் நிலம் தானமாக வழங்கியுள்ளார். இதை உறுதி செய்யும் கல்வெட்டு இன்று அந்த தேவாலயத்தில் உள்ளது 

(ஆதாரம் : Caste, Catholic Christianity, and the Language of Conversion: Social Change and Cultural Translation in Tamil Country, 1519-1774)


கவி வீரராகவ முதலியார் 

கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயர் ஏழைகளுக்கு இரங்கும்
தன்மையினர். புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். தினந்தோறும் தம்மிடம்
விருந்தினர்களாக வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய பொருளை
வழங்குவதை முதற்கடமையாகக் கொண்டனர். அவரவர்களுக்கு
வேண்டியவைகளை அளந்து தரச் செய்தனர்.

கவி வீரராகவ முதலியார் வந்த காலத்தில் ஜமீன்தார் படியளந்து
கொண்டிருப்பதை அறிந்தார். பல பேர்களுக்கு வழங்க வேண்டியிருந்தமையின்
நெடுநேரமாயிற்று, அதை உணர்ந்த கவிஞருக்குப் பெருவியப்பு உண்டாயிற்று.
‘ஏதேது! இன்றைக்கு லக்ஷம் பேருக்குப் படி அளந்திருப்பார்போல் இருக்கிறதே’
என்று நினைத்தார். கவிஞர் நினைப்பதற்கும் மற்றவர்கள் நினைப்பதற்கும்
வித்தியாசம் இல்லையா? அவர் நினைப்பு ஒரு கவியாக மலர்ந்தது, ‘இந்த
ஒப்பில்லாத மழவராயருக்கு மகாவிஷ்ணு ஒப்பாவரோ? திருமால் அளந்தது
மூன்றுபடியே (படி-உலகம்) இவர் அளப்பது ஒரு நாளைக்கு லக்ஷம் இருக்குமே’
என்ற பொருளுடையது அந்தச் செய்யுள்:-

“சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்
தூயசெங் கண்ணன் இணையொப்ப னோதண் துழாயணிந்த
மாயன் அளக்கும் படிமூன்று க்ருஷ்ணைய மாமழவ
ராயன் அளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே.”

(ஆதாரம் நல்லூர் கோவை . உ.வே சா )

இவரை தான் சும்மா போகும் பள்ளி என்று கவிராயர் வசைபாடியுள்ளார் , இதன் மூலம் கவிஞரின் வன்மத்தை அறியலாம் . ஒரு வேலை சில வெள்ளலர்களை அடிமைகளாக வாங்கி மழவராயர்கள்  அடக்கி ஆண்டு வந்ததால் இந்த வன்மம் அவர்கள் மீது
வேளாளருக்கு வந்திருக்கலாம்.

  (ஆதாரம் : sii volume 8 AR 282 of 1903)

ஈழத்தில் மழவராயர் 

இம்மழவராயர்கலே ஈழத்தில் மழவதரசன் என்று அழைக்கப்பட்ட வன்னியர்கள். சோழர் காலத்தில் பல வன்னியர்கள் தொண்டைமண்டலதிளிருந்து குடியேறி ஈழத்தை ஆளதொடங்கினர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் , மழவதரசன் குடி எனப்படும் மழவராயர் வம்சம், கச்சிலார் குடி  எனப்படும்  கச்சிராயர் வம்சம் மற்றும் படையாட்சி குடி, இவர்கள் ஈழத்திலும் வன்னியர் என்ற சாதியாகவே அடையாளபட்டுளன்னர். 

இவற்றை எல்லாம் உறுதி செய்யும் வகையில் பல்ல ஆதாரங்கள் உள்ளனர் அவற்றுள் முக்கியமானது "மட்டகளப்பு வரலாறு"   எனும் நூல் 

                                           (ஆதாரம்: மட்டகளப்பு வரலாறு)

கச்சிலார் குடி என்பது கச்சிராயர் என்று அழைக்கப்படும் காடவராயர் வழி வந்த பல்லவவம்சதினர் ஆவர் 

(ஆதாரம் : south Indian Inscriptions Vol 12 (No. 232 of 1916).)

காடவ மன்னனான குலோத்துங்க சோழ கச்சிராயனை வன்னியர் (பள்ளி) என்று சொல்லும்  கல்வெட்டு 

(ஆதாரம்: மட்டகளப்பு வரலாறு)

இவற்றை மீண்டும் உறுதி செய்கிறது இலங்கை ஆய்வாளர் வெள்ளவூர் கோபால்   அவர்கள் எழுதிய ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும் என்ற நூல் 

(ஈழத்து வன்னியரான மழவதரசன் குடியை படையாட்சி குடி என்று விளக்கும் கல்வெட்டு )
(ஆதாரம் : ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும்)

(ஈழத்தில் இருந்த படையாட்சி குலம் )
(ஆதாரம் : ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும்)

மேலும் 19ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வன்னியர் என்ற சாதி இருந்ததையும் கீழே உள்ள படம் விளக்குகிறது, மேலும் சிலர் வன்னியர் என்ற சாதியே ஈழத்தில் இல்லை  என்று கதை கட்டுகிறார்கள் . கீழே உள்ள படத்தில் வன்னியரும் தனி சாதியாக குறிப்பிடபட்டுள்ளனர். இந்த படம் 1826 இலங்கையில் எடுக்க பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் பட்டியல்      



(ஆதாரம்: மட்டகளப்பு வரலாறு)
 (http://noolaham.net/project/38/3772/3772.pdf)

இதன் மூலம் ஈழத்தை ஆண்ட  மழவதரசன் குடி, கச்சிளார் குடி, படையாட்சி குடி, ஆகியவர்களே ஈழத்தை ஆண்ட வன்னியர் என்பதும், அவர்கள் தமிழகத்தின் தொண்டைமண்டலத்தில் வாழ்ந்து வரும் படையாட்சி, கவுண்டர் , நாயக்கர், கண்டர், மழவராயர், பள்ளி, கச்சிராயர், காடவராயர்  என்று  பட்டங்களை உடைய வன்னிய சாதியினரே என்பது ஆணி தனமான உண்மை ஆகும். 

References  

  • "நல்லூர் கோவை" - உ.வே சாமினாத ஐயர்            (http://www.tamilnavarasam.com/Ilakkiyam/U.Ve_Sa/Nalluru_kovai.pdf)
  • மட்டகளப்பு வரலாறு (http://noolaham.net/project/38/3772/3772.pdf)
  • South Indian Inscriptions Vol 12 (No. 232 of 1916).)
  • Trichinopoly District Gazetteer - 1907 
  • "இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல்கள் - 21" ( https://ta.wikisource.org/s/3ob)
  • "கோதண்டராமசுவாமி சதகம் ( பாடல் 101)" -  இராமதாச பரம பாகவதர்
  • South Indian Temple Inscriptions, Vol-III (Part-1), 1511 A.D.
  • "பத்துப்பாட்டு ஆராய்ச்சி" - டாக்டர் மா. இராசமாணிக்கனார்
  •  "வன்னியர்" - நடன. காசிநாதன்
  • A.R.E 1978 No. 375, 381 
  • தமிழக செப்பேடுகள் (த.நா.அ.தொ.து) புதுகோட்டை செப்பேடு, அரியலூர் செப்பேடு,   திருமானூர் செப்பேடு   
  • Caste, Catholic Christianity, and the Language of Conversion: Social Change and Cultural Translation in Tamil Country, 1519-1774 ( https://books.google.co.in/books?id=MuYrGRpoNxwC&dq=rangappa+mazhavarayar&q=Rangappa+Mazhavarayar#v=snippet&q=Rangappa%20Mazhavarayar&f=false)
  • South Indian Inscriptions volume 8 AR 282 of 1903
  • "ஈழத்து வன்னியரும் தமிழகத்து வன்னியரும்" -  வெள்ளவூர் கோபால் 
  •  அகம்: 61 (மாமூலனார்)


=====நன்றி==== 


4 comments: