Tuesday, 19 January 2016

பன்னாட்டார், தேவர்கள் என்று வன்னியருக்கு பட்டம் சூடிய சோழனும் பாண்டியனும்


வீர பராக்கிரமம் பொருந்திய சோழர் காலத்து வன்னியர் 

===================================================
தமிழக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக பல அறிஞர்களால் கருதப்படும் "பெரிய வடுகன் கலவரம்". தமிழ் நாட்டு வரலாற்றில் வேற எந்த சமூகத்துக்கு இப்படி ஒரு பெருமைமிகு நிகழ்வு நடைபெற்றதில்லை. அதை விளக்குகிறது கிழே உள்ள "திட்டக்குடி கல்வெட்டு " 

அரியலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள க்ஷத்ரிய மாற வர்மன் பராக்கிரம பாண்டியனின் (கி.பி.1338) கல்வெட்டில் வன்னியர்களின் விற்படை நிகழ்த்திய வீரச் செயலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிரம சோழனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி.1122) கர்நாடகத்தில் போசல (ஹொய்சால) நாட்டை ஆண்டு வந்த முதலாம் விஷ்ணு வர்த்தனன் என்ற அரசன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். இதனைப் பராக்கிரமப் பாண்டியனின் கல்வெட்டு "பெரியவடுகன் கலகம்" என்று குறிப்பிடுகிறது. சோழநாட்டின் மீது படையெடுத்த போசள மன்னன் ஆடுதுறை பகுதியிலும் தாக்குதல் நடத்தி ஆடுதுறை சிவன் கோயிலில் இருந்த தெய்வத் திருமேனிகளையும் நாயன்மார் மூவர் பிரதிமங்களையும் கவர்ந்து சென்று போசளர் தலைநகரமாகிய துவாரசமுத்திரத்தில் (Karnataka) வைத்திருந்தனர்.

பின்னர் இதனை அறிந்த ஆடுதுறை பகுதியை சேர்ந்த பள்ளிகள் (வன்னியர்கள்) அங்கிருந்து துவாரசமுத்திரம் சென்று போசளர்களுடன் பெரும் சண்டையிட்டு (நெடு அத்தம் குடுத்து), அவர்களால் கவரப்பெற்ற ஆடுதுறை கோயிலுக்குரிய தெய்வத் திருமேனிகளையும், நாயன்மார் மூவர் பிரதிமங்களையும் மீட்டு வந்து அத்திருவுருவங்களை மீண்டும் ஆடுதுறை சிவன் கோயிலிலேயே வைத்து நாள் வழிபாடுகள் செய்வதற்கு ஆண்டொன்றுக்கு 100 கலம் அரிசியும், 5000 காசும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அத்திருமேனிகளை வழிபாட்டில் வைத்தனர். அதற்காக அவர்கள் குடி ஒன்றுக்கு ஒருகுறுணி அரிசியும், 50 காசும், அமுதுபடி மற்றும் சாத்துபடிக்கு வில்லுக்கு ஒரு பணமாக வசூல் செய்வது என்று முடிவுசெய்தனர்.
சிலைகளை மீட்ட பள்ளிகளைக் கௌரவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு பட்டுப்பரிவட்ட மரியாதை கொடுத்து, இறைவன் திருமுன் நின்று வழிபாடு செய்யும் உரிமையும் அளித்து, "வந்தான் தேவர்கள் தேவன்" மற்றும் "பன்னாட்டார் தம்பிரான்" என்ற திருசின்னமும் (Royal Insignia) அளித்து வன்னியர்களின் வீரத்தை பெருமை படுத்தினார் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அவர்கள் (பெருமாள் குலோத்துங்கச் சோழ தேவர் திருவாய் மலர்ந்தருளின படி). இதற்கான ஆணையை அவர் பிறப்பித்தார்கள் என்று கல்வெட்டு கூறுகின்றது.

கி.பி.1122 இல் விக்கிரம சோழன் காலத்தில் நடந்த ஒரு அருஞ் செயலுக்காக 216 ஆண்டுகள் கழித்து (சோழர் ஆட்சிக்குப் பிறகு), மாற வர்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் அதே பள்ளி இன மக்களுக்கு மரியாதை மற்றும் சலுகைகள் வழங்கியமை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

கல்வெட்டில் இருந்து அறியப்படும் வன்னிய விற்படை குழுக்களில் பெயர்கள் (Bowmen Regiment) :-
"ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முடிகொண்ட சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"ஓலைப்பாடியில் காணி உடைய பள்ளிகளில் காரி கிரிச்சன் விக்கிரம சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"


----- xx ----- xx ----- xx -----
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளின் (வன்னியர்களின்) எல்லைப் பகுதிகள் :-
"வீரநாராயணன் பேரேரிக்கு மேற்க்கு பச்சை மலைக்கு கிழக்கு காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்குத் உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தொறும்"
The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts (180 Sq/Kms).
கல்வெட்டின் இறுதியில் : "பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம்", "பள்ளி நாட்டவர் வம்சம் விளங்க" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

கல்வெட்டு வாசகம்:

  1.  ஸ்வஸ்தி ஶ்ரீ திரிபுவனச் சக்கரவத்தில் ஶ்ரீ பராக்கிரம பாண்டிய தேவர்க்கு யாண்டு ச(4) ஆவது வைகாசி மாதம் நாலாந் தியதி பல மண்டலங்களில் நாடும் நகரமும் எல்லா மண்டலங்களில்
  2.  பலநாட்டவரும் பழி காரியங் கேழ்ப்பதாக உள்ளூரில் பெரிய நாட்டான் காவி நிரவற குறைவறக் கூடி இருக்க உடையார் குற்றம் பெறுத்தருளிய நாயனார்
  3.  கோயிலில் எங்கள் மூதாதிகள் கல்வெட்டினபடி திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஶ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு பாண்டு ச(4) ஆவதுமுடிகொண்ட சோழ வளநாட்டு உகளூர் கூற்றத்து இறையான புஞ்
  4.  சை குரங்காடி மகாதேவர்க்கு இந்நாட்டில் ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முஇடிகொண்ட சோக முத்தரையன் உள்ளிட்டாரும் ஓலைப்பாடியில் காணி உடை
  5. .ய பள்ளிகளில் காரிகிரிச்சன் விக்கிரமசோழ முத்தரையன் உள்ளிட்டாரும், தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்
  6.  மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகதசோழ முத்தரையன் உள்ளிட்டாரும் இவனைவரோம் கல்வெட்டி குடுத்த ப
  7. ரிசாவது இன்னாயநார் கோயிலில் திருமேனி நாயமார் பெரிய வடுகன் கலகத்தில் செமம..... தோரசமுத்திரதேற எழுந்தருளி போகையில் இன்னாயமாற்கு நெடு அத்தம் குடுத்து மீண்டும் கோயிலிலே எழுந்த
  8.  ருளப் பண்ணிநர்களென்று கொண்ட உபயமாவது இன்னாயநார் திருநாளுளிட்ட பல திவலைகளுக்கும் அமுதுபடிக்கும் அரிசி நூற்றுக் கலமும் படிவெஞ்சனமஞ் சாத்துபடிக்கு காசு ஐயாயிரமும் இந்
  9. த குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டார் திருநாளகத்தோறும் குறைவறுத்து வீரநாராயணன் பேரேரிக்கு மேற்கு பச்சை மலை கிழக்கு
  10.  காவேரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணை ஆற்றுக்கு தெற்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தோறும் குடிக்கு ஐம்பது காசும் அரிசி குறுணியுமாக நாட்டில் வெண்கலம் எடுத்து மண்கலம் இடித்து(ம்)
  11.  குத்தியும் தண்டியும் முதலாக்கி திருநாள்தொறும் இப்படி குறைவறுக்கக் கடவோமாகவும் சம்மத்திதுச் சந்திராதித்தவரையும் செல்லக் கல்வெட்டிக் குடுத்தோம் பள்ளி நாட்டவரோம் இப்படி செய்
  12.  த பள்ளி நாட்டவர்க்கு பட்டுப் பரிவட்டமும் திருமுனொடுக்கும் பெறக் கடவதாகவும் எழுந்தருளிப் புறப்பட்டால் "வந்தான் தேவர்கள் தேவன்" என்கிற திருச்சின்னத்து முன்பே "பன்னாட்டான் தம்பிரான்" என்கிற திரு
  13.  ச் சின்னம் பணிமாறக் கடவதென்று பெருமாள் குலோத்துங்க சோழ தேவர் திருவாய் மலர்ந்தருளின படிக்கு ச்ரீ மாஹேஸ்வர ரஷை இக்கல்வெட்டினபடியே திருனாளகத்தொறும் தண்டி கொ
  14. ள்ளவும் இன்னாயநாற்கு அமுதுபடி சாத்துபடிக்கு உடலாக நாலவது முதல் வில்லுக்கொரு பணமாக...... வெண்கலம் அடுத்தும் மண்கலம் உடைத்தும் குத்தியும் அடிக்கடி தண்டியு(ம்) முத
  15. நாக்கவும் இதுக்கு இலங்கணமஞ் சொன்னாருண்டாகில் நம்மிலொருவன் அல்லவாகவும் இவன் (ஹ)பத்தி..... சோழன் எடுத்த இந்நாயனாற்கு திருப்பணி
  16. க்கு முதலாக்கவும் இப்படி சம்மதித்த் சந்திராதித்தவரையுஞ் செல்ல கல்வெட்டிக் குடுத்தோம் பல மண்டலங்களில் பள்ளி நாட்டவரோம் இப்படிக்கு இவை பல
  17.  மண்டலங்களில் பள்ளி நாட்டவர் பணியால் இடங்கை விக்கிரம.... எழுத்து பள்ளி நாட்டவர் வம்சம் விளங்க.

இதன் முலம் வன்னியர்கள் 11ம் நூற்றாண்டு முதலே  "தேவர்கள்" மற்றும்  "பன்னாட்டார் " என்று அழைகப்படதையும். மேலும் அவர்களுக்கு  இப்பட்டங்களை தந்து கவுரவித்தது சோழனும் பாண்டியனும்  என்பதன் மூலம் வன்னியர்கள் அன்று இருந்த உயர்ந்த நிலையையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது  

(Reference : ஆவணம், இதழ்-18, பக்கம் 84-86), (A.R.E. No.35 of 1913).

நன்றி