Thursday 21 January 2016

நீலகங்கரையர் மன்னர்கள் வன்னியர்களே (பள்ளி )

நீலகங்கரையர்கள்: வன்னியர்கள் என்று கல்வெட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது 

====================================================================

Neelangaraiyar Vanniyar Statue
சோழப் பேரரசு என்ற புகழ்மிகு மாளிகையை தாங்கி நின்ற வைரமணி தூண்களாக விளங்கிய குறுநில மன்னர்களிலே "நீலகங்கரையர்கள்" என்ற வம்சமும் ஒன்றாகும். இவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை" சார்ந்த மன்னர்கள் ஆவார்கள். தொண்டை மண்டலத்தை சோழர்கள், பாண்டியர்கள், காடவர்கள் மற்றும் தெலுங்கு சோழர்கள் காலத்தில் ஆண்டவர்கள் நீலகங்கரைய மன்னர்கள். இவர்கள் சோழ மன்னர்களுக்கும் மற்றும் வாணகோவரையர்களுக்கும் உறவினர்கள் ஆவார்கள். இவர்களைப் பற்றி 80 மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
----- xx ----- xx ----- xx -----
Neelangaraiyar Vanniyar Inscriptions

தாம்பரம் அருகில் உள்ள மணிமங்கலம் ராஜகோபால பெருமாள் கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 12 ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு (கி.பி.1189) நீலகங்கரைய மன்னர்களை "வன்னிய நாயன்" என்று சொல்கிறது (S.I.I. Vol-III, No.36, page 82 & 83). அது :-
"திருச்சுரத்துக் கண்ணப்பன் தூசி ஆதி நாயகன் நீலகங்கரையன்
வன்னிய நாயனான உத்தம நீதிக் கண்ணப்பன்" (6th Line of Inscription).
"இவ் வன்னிய நாயனான உத்தம நீதிக் கண்ணப்பர்" (9th Line of Inscription).

----- xx ----- xx ------ xx -----
Neelangaraiyar Vanniyar Inscriptions


விழுப்புரம் பிரம்மதேசத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழனின் 31 வது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு (கி.பி.1101) ஒன்று நீலகங்கரைய மன்னரை "பள்ளி" என்று குறிப்பிடுகிறது (A.R.E. No.159 of 1918). அது :-
"உத்தமச் சோழ வளநாட்டு ஆமூரிருக்கும் பள்ளி ஆம்மூரி
பிச்சனான ராஜேந்திர சோழ நீலகங்கரையன்"
(Note : Palli community is mentioned in English as "Ryots" in certain inscriptions by the then scholars)
----- xx ----- xx ----- xx -----

விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், திம்மிச்சூரில் உள்ள பாண்டிய மன்னர் பெருமாள் குலசேகர தேவர் காலத்து கல்வெட்டு நீலகங்கரைய மன்னர் ஒருவரை "பள்ளி ஜாதி" என்று குறிப்பிடுகிறது (A.R.E. No.250 of 1936-1937). அது :-
"வேலூர் பள்ளி சமூகத்தை சேர்ந்த கூத்தன் நீலகங்கரையன்"
Neelangaraiyar Vanniyar Inscriptions

----- xx ----- xx ----- xx -----
தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் வெளியிட்ட "இடங்கை வலங்கையர் வரலாறு" என்ற நூலில் "இடங்கை வலங்கை புராணத்தில்" நீலகங்கரையர்களை "பள்ளி", "வன்னியர்" என்று குறிப்பிடுகிறது. அது :-


"சர்வ ஜீவா தயாபரனான வில்வீர பராக்ரமனான ருத்ரப் பள்ளியர் குமாரராகிய நீலகங்கன், வஜ்ரபாகன், கங்கபரிபாலன், சம்புகுல வேந்தன்"
"நீலகங்கன் வரத்திலே வந்தவாள் என்ற பள்ளியர் க்ஷிர நதிக்கு உத்தரபாகம் க்ருஷ்ணாபர்யந்தரமும் இருந்த வன்னியர் கிருஷ்ண வன்னியர்"

----- xx ----- xx ----- xx -----

திருவள்ளூர், தொடுக்காடில் உள்ள சிவன் கோயில் மண்டபத்தினை "பஞ்சநதிவாண நீலகங்கரையன்", மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 21 வது ஆட்சியாண்டில் (கி.பி.1191) கட்டியிருக்கிறார். அவரது சிலையும் அவரது ராணியின் சிலையும் அம் மண்டபதில் உள்ளது. அந்த புகைப்படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
-----. xx ----- xx ----- xx -----

ஆதாரம் :
1. Indian Archaeology Review 1918
2. Indian Archaeology Review 1936-1937
3. South Indian Inscriptions Volume III

3 comments:

  1. Get CMBT bus stand advertising agency and Hoardings in chennai through Eumaxindia over Chennai cities. Look at cities, pics and get a free quote.

    Chennai Hoarding

    ReplyDelete
  2. Dinakaran advertisement agency in Chennai, Dinakaran Newspaper Ad Booking in Chennai, Advertising Agencies Dinakaran in Chennai, Ads in Dinakaran

    Advertising Agencies Dinakaran in Chennai

    ReplyDelete